உலக அன்னியச் செலாவணி கையிருப்பிலுள்ள ரென்மின்பியின் விகிதம் அதிகரிப்பு

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் முதலாவது காலாண்டில்..
உலக அன்னியச் செலாவணி கையிருப்பிலுள்ள ரென்மின்பியின் விகிதம் அதிகரிப்பு

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், உலக அன்னியச் செலாவணி கையிருப்பில் சீனாவிந் ரென்மின்பியின் விகிதம் 2.02 விழுக்காடாகும். இது, முன்பு இல்லாத அளவிற்கு மிக அதிகம்.

இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், புதிய ரக கரோனா வைரஸ் பரவிய நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அமெரிக்க டாலரைக் கையிருப்பாக வைத்தன.

இதனால், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட்ட அன்னியச் செலாவணிக் கையிருப்புகளில் அமெரிக்க டாலரின் விகிதம் 61.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பில் யூரோவின் விகிதம் 20 விழுக்காடாகவும் ஜப்பானின் யென்னின் விகிதம் 5.6 விழுக்காடாகவும் உள்ளது. 

உலகளாவிய அன்னியச் செலாவணி கையிருப்பு 117.31 கோடி அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளதையும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com