பாகிஸ்தானில் கரோனாவில் இருந்து மீண்ட 105 வயது முதியவர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 105 வயது முதியவர் கரேனாவை வென்று, பூரண குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். 
pakistan corona test
pakistan corona test

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 105 வயது முதியவர் கரேனாவை வென்று, பூரண குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். 

பஸல் ராவூப் என்ற 105 வயது முதியவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இவருக்குப் கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கரோனா வார்டில் மாற்றப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். 

வியாழக்கிழமை முதியவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, பூரண குணமடைந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

பாகிஸ்தானில் இதுவரை 2,21,896 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்றுக்கு 4,551 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதித்த 1,13,623 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com