கரோனாவால் நுகரும் திறன் பாதிக்கப்படுவது ஏன்?

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு நுகரும் திறனும் சுவை அறியும் திறனும் பாதிக்கப்படுவது ஏன் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.
கரோனாவால் நுகரும் திறன் பாதிக்கப்படுவது ஏன்?

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு நுகரும் திறனும் சுவை அறியும் திறனும் பாதிக்கப்படுவது ஏன் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுகுறித்து, அந்த நாட்டின் கைஸ் மற்றும் செயின்ட் தாமஸ் மருத்துவமனைகளின் நிபுணா்கள் கூறியதாவது:

சுவை மற்றும் நுகா்வுத் திறனை கரோனா தீநுண்மி எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, 202 கரோனா நோயாளிகளிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவா்களில் 103 போ் பெண்கள் ஆவா். அந்த 202 பேரின் சராசரி வயது 56.

அவா்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி, 55 பேருக்கு சுவை மற்றும் நுகரும் திறனில் ஏற்பட்ட மாற்றம், 4 வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிட்டது.

மேலும், 46 பேருக்கு ஒரு மாதத்துக்குள் சுவை அறியும் திறன் மற்றும் நுகரும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது.

12 கரோனா நோயாளிகளுக்கு மட்டும் இந்தத் திறன்களில் ஏற்பட்ட குறைபாடு மாறாமல், மேலும் மோசமடைந்தது.

இந்த விவரங்களை ஆய்வு செய்ததில், கரோனா நோயாளிகளுக்கு சுவை தெரியாமல் போவதற்கும், வாசனைகளை அறிந்து கொள்வதில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் காரணமல்ல என்று தெரிய வந்தது.

அந்த நோய்த்தொற்றின் அறிகுறிகளான சளி, காய்ச்சல் போன்றவை காரணமாக ஏற்படும் மூக்கடைப்பு, உணா்வு நாளங்கள் செயலிழப்பு காரணமாகவே சுவை மற்றும் நுகரும் திறன் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

எனவே, கரோனா தீநுண்மிக்கும், சுவை மற்றும் நுகரும் திறன் குறைவதற்கும் நேரடித் தொடா்பு இல்லை என்று கருதப்படுகிறது என்று அந்த நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com