நடைமுறைப்படுத்து குறித்த விரிவான விதிகள் வெளியீடு

சீன மக்கள் குடியரசு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 43ஆவது சட்டப்பிரிவு விதிகள் ஜூலை 7ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
நடைமுறைப்படுத்து குறித்த விரிவான விதிகள் வெளியீடு

சீன மக்கள் குடியரசு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 43ஆவது சட்டப்பிரிவு விதிகள் ஜூலை 7ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு 6ஆம் நாள் வெளியிட்ட செய்தியறிக்கையின்படி, தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் குற்றங்களைத் தடுத்து தண்டனை விதிக்கும் வகையில் இந்த விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது. இவ்விதிகளின் படி, விசாரணைக்குள்ளான நபர் ஹாங்காங்கிலிருந்து விலகுவதற்குத் தடை விதித்தல், தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் பறிமுதல் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

இதனிடையில், ஹாங்காங்கிற்கான அமெரிக்கத் துணை நிலைத் தூதர் ஹான்ஸ்காம்ஸ்மித் ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றி வெளிப்படையாகத் திரித்துப் பேசியதை ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் 6ஆம் நாள் வன்மையாகக் கண்டித்தார். இது குறித்து ஹாங்காங் அரசின் அரசியில் பிரிவின் தலைவரும் பொதுப் பாதுகாப்புத் துறையின் தலைவரும் அதே நாள் ஹான்ஸ்காம்ஸ்மித்தை வரவழைத்து ஹாங்காங் தரப்பின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com