கரோனா வைரஸ் குறித்த கேள்விகளுக்கு நவார்ரோ பதில் அளிக்க வேண்டும்: சீனா

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய வர்த்தக மற்றும் உற்பத்தி தொழில் கொள்கை அலுவலகத் தலைவர் பீட்டர் நவார்ரோ சமீபத்தில் கரோனா..
கரோனா வைரஸ் குறித்த கேள்விகளுக்கு நவார்ரோ பதில் அளிக்க வேண்டும்: சீனா

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய வர்த்தக மற்றும் உற்பத்தி தொழில் கொள்கை அலுவலகத் தலைவர் பீட்டர் நவார்ரோ சமீபத்தில் கரோனா தொற்று நோய் பிரச்சினை தொடர்பாக சீனா மீது மீண்டும் அவதூறு பரப்பிப் பேசியுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீஜியன் 6ஆம் நாள் கூறுகையில்,

அடிப்படை உண்மை மற்றும் அறிவியல் ஆகியவற்றை, நவார்ரோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் மதிக்க வேண்டும். இவர்கள், தனது பொறுப்பிற்கு ஏற்ப, உள்நாட்டில் நோயைச் சமாளித்து  மக்கள் உயிரைக் காப்பதை முதன்மை இடத்தில் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பொய் பேசுவதையும் வதந்திகளை உருவாக்குவதையும் வழக்கமாக கொண்டுள்ள நவார்ரோ, சீனாவுக்கு எதிரான அரசியல் வைரஸைப் பரப்பி வருகிறார்.

மேலும்,  அமெரிக்க அரசு, ஃபோர்ட் டெட்ரிக் எனும் ஆராய்ச்சிக் கூடத்தை மூடியதன் உண்மையான காரணம் என்ன? இந்த மூடப்பட்ட ஆய்வகத்துக்கும் அமெரிக்காவில் மின் சிகரெட் நோய், பெருமளவிலான காய்ச்சல், புதிய ரக கரோனா தொற்று நோய் ஆகியற்றுக்கும் இடையே என்ன தொடர்பு?உலக சுகாதார அமைப்பு அல்லது சர்வதேச வல்லுநர் குழு, அமெரிக்காவில் கரோனா தொற்று நோயின் தோற்றம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமெரிக்கா எப்போது அழைக்கும்?  ஆகிய சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு, நவார்ரோ பதில் அளிக்க வேண்டும் எனறும் சாவ் லீஜியான் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com