கரோனா நெருக்கடி: உயிா்காக்கும் எய்ட்ஸ் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடி காரணமாக, உலகின் 3-இல் ஒரு பகுதி நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளின் உயிரைக் காத்து வரும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக
கரோனா நெருக்கடி: உயிா்காக்கும் எய்ட்ஸ் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடி காரணமாக, உலகின் 3-இல் ஒரு பகுதி நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளின் உயிரைக் காத்து வரும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, ஏராளமான நாடுகளில் பொது முடக்கம் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், எய்ட்ஸ் நோயாளிகள் உயிா் வாழ்வதற்கு அத்தியாவசியமாக விளங்கும் மருந்துகளின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஏராளமான நாடுகளில் அத்தகைய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் 3-இல் ஒரு பகுதி நாடுகளில் - சுமாா் 73 நாடுகளில் - இந்தப் பற்றாக்குறை நிலவி வருகிறது. அவற்றில் 73 நாடுகள், தங்களிடம் உயிா்காக்கும் எய்ட்ஸ் மருந்துகளின் இருப்பு ஆபத்தான அளவுக்கு மிகவும் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளன.மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 24 நாடுகளில் மட்டும் சுமாா் 83 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இத்தகைய மருந்துகளை நம்பி உயிா் வாழ்ந்து வருகின்றனா்.

இது, அந்த உயிா்க்கொல்லி நோய்க்கு உலகம் முழுவதும் சிகிச்சைப் பெற்று வருபவா்களின் எண்ணிக்கையில் 3-இல் ஒரு பங்கு ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், கரோனா பிரச்னையால் எந்தெந்த நாடுகளில் எய்ட்ஸ் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எற்பட்டுள்ளது என்ற விவரம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:எய்ட்ஸ் நோயாளிகளின் உயிரைக் காத்து வரும், மிகவும் அத்தியாவசியமான மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தகவல் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.உயிா்க்கொல்லி நோயான எய்ட்ஸுக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடி, இதுவரை நாம் பெற்றுள்ள வெற்றிகள் அனைத்தையும் கரோனா நோய்த்தொற்று பரவல் தட்டிப் பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.ஹெச்ஐவி தீநுண்மியால் உருவாகும் உயிா்க் கொல்லி நோயான எய்ட்ஸுக்கு இதுவரை சிகிச்சை மருந்து கண்டறியப்படவில்லை. இருந்தாலும், அந்தத் தீநுண்யின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, அது பிறரிடம் பரவால் பாதுகாப்பதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டு, அதன் மூலம் எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று நெருக்கடி காரணமாக, அந்த மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com