சீனாவின் புதிய ரக பொருளாதாரங்களில் புதிய வாய்ப்புகள்

2019ஆம் ஆண்டு, சீனாவில் புதிய தொழில், புதிய உருவாக்கம், புதிய வணிக மாதிரி ஆகிய மூன்று புதிய ரக பொருளாதார வழிகளின் மூலம் கிடைத்த மதிப்புத் தொகை, 16 லட்சத்து 19ஆயிரம் 270 கோடி யுவானாகும்.
சீனாவின் புதிய ரக பொருளாதாரங்களில் புதிய வாய்ப்புகள்

2019ஆம் ஆண்டு, சீனாவில் புதிய தொழில், புதிய உருவாக்கம், புதிய வணிக மாதிரி ஆகிய மூன்று புதிய ரக பொருளாதார வழிகளின் மூலம் கிடைத்த மதிப்புத் தொகை, 16 லட்சத்து 19ஆயிரம் 270 கோடி யுவானாகும்.

இந்த மதிப்புத் தொகை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 16.3 விழுக்காடு வகித்தது. அது, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 9.3 விழுக்காடு அதிகம் என்று சீன தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஜுலை 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த போக்கில், உணவுகளை வீடுகளுக்கு விநியோகம் செய்யும்தொழில், தூதஞ்சல் சேவை, இணைய நேரலை வழியாக விற்பனை செய்யும் தொழில் ஆகியவை தற்போது சீனாவில் விரைவாக வளர்ந்து வருகின்றன. சீனாவின் இந்த புதிய ரக பொருளாதாரங்கள் நன்றாக வளர்ந்து வருவதன் முக்கிய காரணங்கள் என்னென்ன?

முதலில், சீனாவில் அடிப்படை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 5ஜி தொலைத் தொடர்பு, மேகக் கணிமை (கிளவுட் கம்ப்யூட்டிங்), பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு,  பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி), பெய்டொவ் புவியிடங்காட்டி அமைப்பு ஆகிய புதிய ரக உள்கட்டமைப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், இவை, சீனாவின் புதிய ரகப் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அடிப்படையையும் ஆதாரத்தையும் உருவாக்கியுள்ளன.

இரண்டாவதாக, சீனாவில் தொழில் புரிவதற்கான சூழல் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு, தொழில் புரிவதற்கு உகந்த சூழல் குறித்த உலக நாடுகளின் தரவரிசையில், 32 இடங்கள் உயர்ந்து, சீனா உலகின் 46ஆவது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீனாவில் தொழில் தொடங்குவதற்கு எளிமையான மற்றும் சாதகமான சூழல் காணப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, சீனாவில் புதுமையாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டும் நெடுநோடுத் திட்டம், புதிய ரக பொருளாதார வளர்ச்சிக்கு நன்மையளிப்பதாகவும் உள்ளது.

நான்காவதாக, சீனாவில் சீர்திருத்தக் கொள்கை மற்றும் வெளிநாட்டு திறப்பு அளவு விரிவாக்கப்பட்டதால், குறிப்பாக, சேவைத் துறையில் திறப்புக் கொள்கை ஆகியவை, புதிய பொருளாதார வளர்ச்சிக்கு கொள்கை ரீதியிலான ஆதரவை அளித்துள்ளன.

இவ்வாண்டு, கரோனா தொற்று நோயால், சீனப் பொருளாதார வளர்ச்சியில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அறைகூவல்களை எதிர்கொண்டுள்ள சீனப் பொருளாதாரம், படிப்படியாக அதன் பாதிப்புகளில் இருந்து மீட்சி அடைந்து வருகிறது. இதற்கு, புதிய ரகப் பொருளாதாரங்கள் பெரிய பங்கு ஆற்றி வருகின்றன. எடுத்துக்காட்டாக, கரோனா தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், இணைய வர்த்தகம், இணைய நேரலை ஆகியவை, நகரப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி,  மக்களின் வருமானத்தை அதிகரித்துள்ளதோடு, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய உந்து சக்தியாகவும் உள்ளன.

இவ்வாண்டு முதல், தகவல் நுகர்வு, இணைய நுகர்வு, நுன்ணறிவு நுகர்வு ஆகிய புதிய சந்தைத் தேவைகள் விரைவாக அதிகரித்து வருவதால், இணையப் பொருளாதாரத்தை அடையாளச் சின்னமாகக் கொண்டுள்ள புதிய உந்து சக்தி தரும் பொருளாதாரம், வலுவான உயிராற்றலை வெளிக்காட்டுகிறது.

எதிர்காலத்தில், புதிய தொழில், புதிய உருவாக்கம், புதிய வணிக மாதிரி ஆகிய புதிய ரக பொருளாதாரங்கள், மேலதிக வாய்ப்புகளைக் கொண்டு வரும். இது, சீனப் பொருளாதாரம் புத்துயிர் பெற்று உயர் தரமான வளர்ச்சியை நனவாக்குவதற்கு முக்கிய உந்து சக்தியாகத் திகழும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com