நியாயமான போட்டியில் சொல்லொன்றும் செயலொன்றுமாய் செயல்படும் அமெரிக்கா

சீனாவும் அமெரிக்காவும், ஒத்துழைப்புத் திசையை நோக்கிச் செல்லும் ஒட்டுமொத்த நிலைமை தடுக்கப்பட முடியாதது..
நியாயமான போட்டியில் சொல்லொன்றும் செயலொன்றுமாய் செயல்படும் அமெரிக்கா

சீனாவும் அமெரிக்காவும், ஒத்துழைப்புத் திசையை நோக்கிச் செல்லும் ஒட்டுமொத்த நிலைமை தடுக்கப்பட முடியாதது என்று சீன வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் லேயூச்செங் சமீபத்தில் சீன-அமெரிக்க உறவு குறித்து காணொலி வழி நடைபெற்ற உரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.

இன்றைய காலகட்டம் உலகமயமாக்கலுக்கான காலகட்டம்.  இந்நிலையில், பல்வேறு நாடுகளிடையேயான தொடர்பை ஆழமாக்குவதன் மூலம் உலகமயமாக்கலில், ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுதல் என்ற சரியான வழியில் செல்கின்றோம்.

இப்பின்னணியில், சீன – அமெரிக்க உறவுத் துண்டிப்பு என்ற எண்ணம், நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. இதன்விளைவாக, எவருக்கும் நன்மை கிடைக்காது. கொவைட்-19 தொற்று நோய்ப் பரவலால், சீனா – அமெரிக்கா இடையேயான மக்கள் தொடர்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஏப்ரலில், இரு தரப்பு வர்த்தகத் தொகை, 4,120 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளதையடுத்து, சீனா  அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மீண்டும் மாறியுள்ளது. அதேசமயம்,  சீனா, இன்னும் அமெரிக்க நிறுவனங்களின் பெருவிருப்பத்திற்குரிய சந்தையாகவும் திகழ்கின்றது. முன்பு, சீன – அமெரிக்க வர்த்தகத்தில் காணப்பட்ட சர்ச்சையால், பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களின் மதிப்பில் 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர் குறைந்தது. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளைத் துண்டிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

உறவைத் துண்டிக்கும் எண்ணத்திற்கு மாற்றாக ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, கொவைட்-19 தொற்று நோயைச் சமாளிக்கும் போக்கில், அமெரிக்கா தன் நண்பர்களை எதிரியாக கருதக்கூடாது.  சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, இன்னல்களைச் சமாளிக்க வேண்டும்.

மேலும், சீன – அமெரிக்க போட்டி என்பது “சுழி விளைவு வினை”ஆக இருக்க கூடாது. எத்தகைய விலை கொடுத்தாவது சீனாவை வீழ்த்தும் வகையில் செயல்படுவது என்ற எண்ணம் மிகவும் அபாயகரமானது.  இதனிடையில், சந்தைக் கோட்பாட்டைப் பின்பற்றி, நியாயமாகப் போட்டியிட வேண்டுமென்பதை எப்போதும் வலியுறுத்தும் அமெரிக்கா தான் சொன்னபடி செயல்படுவதில்லை. மாறாக, இப்போட்டியில் தன்னை விட சிறந்த மற்றும் திறன்மிக்கவர்கள் இருப்பதை அமெரிக்கா அனுமதிப்பதில்லை. 

தகவல்: சீனஊடகக்குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com