உலகச் சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது சட்ட விரோதமானது: தி லன்செட்

அமெரிக்காவின் பல நிபுணர்கள் ஒன்றிணைந்து பிரிட்டனின் தி லன்செட் எனும் புகழ்பெற்ற மருத்துவ இதழில் 9ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உலகச் சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது சட்ட விரோதமானது: தி லன்செட்

அமெரிக்காவின் பல நிபுணர்கள் ஒன்றிணைந்து பிரிட்டனின் தி லன்செட் எனும் புகழ்பெற்ற மருத்துவ இதழில் 9ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அக்கட்டுரையில், உலகச் சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது சட்ட மீறல் என்றும், இம்முடிவால் உலகம் மற்றும் அமெரிக்கச் சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1948ஆம் ஆண்டு ஐ.நா. தொடர்பான தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அமெரிக்கா உலகச் சுகாதார அமைப்பில் சேர்ந்தது. இத்தீர்மானம் அடுத்தடுத்த அமெரிக்க அரசுகளின் ஆதரவையும் பெற்றது. தற்போதைய அமெரிக்க அரசு நாடாளுமன்றத்தின் உறுதியான அங்கீகாரத்தைப் பெறாத நிலையில் ஒரு சார்பாக இவ்வமைப்பிலிருந்து விலகுவது, அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளது.

மேலும், சட்டப்படி இவ்வமைப்புக்கான கட்டாய நன்கொடைத் தொகையை அமெரிக்கா 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜார்ஜிடாவ்ன் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்கள் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகச் சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது, அதன் சொந்தப் பாதுகாப்பு, தூதாண்மை மற்றும் செல்வாக்கிற்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். உலகளவில் உலகச் சுகாதார அமைப்பின் செல்வாக்கு மிக அதிகம் என்பதால், அதன் மேலாண்மை மற்றும் திட்டவரைவிலிருந்து அமெரிக்க அரசு முற்றிலும் விலகுவது மிகவும் கடினம். அமெரிக்காவின் பல நிறுவனங்கள் இவ்வமைப்புடன் மிக முக்கியமான ஆய்வு ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இருதரப்புறவு துண்டிக்கப்பட்டால், தொடர்புடைய பணிகள் பாதிக்கப்படும். கொள்ளை நோய் பரவலை விரைவாகச் சமாளிப்பதிலும் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் சுகாதார அமைப்பிலிருந்து விலகிய பிறகு, உலகளவில் செல்வாக்குமிக்க முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் போது அமெரிக்கா ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்கும். மேலும், தனிப்பட்ட அமெரிக்க திட்டம், உலக அமைப்புக்குப் பதிலாக செயல்பட ஒருபோதும் முடியாது. பலதுருவ உலகத்தில் ஒப்பந்த பொறுப்பு இல்லாமல் போனால், மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பையும் அமெரிக்கா இழக்கும்.

அமெரிக்கா மற்றும் முழு உலகின் சுகாதாரப் பாதுகாப்புக்கு உலகச் சுகாதார அமைப்புடனான வலுவான ஒத்துழைப்பு தேவை. அதனுடனான தொடர்பைத் துண்டிப்பது இதற்குத் தீங்குவிளைவிக்கும். வரலாற்றில் காணாத அவசர சுகாதாரச் சம்பவத்தை எதிர்கொண்டு வரும் இத்தகு நிலைமையில் தற்போதைய உலகம் இது போன்ற மோசமான முடிவுகளைப் பார்க்க விரும்பவில்லை என்றும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com