ஜப்பானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு

ஜப்பானின் பல பகுதிகளில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு


டோக்யோ: ஜப்பானின் பல பகுதிகளில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. 16 பேரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியான க்யுஷுவில் தொடர் மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு,  நிலச்சரிவுகள் காரணமாக நாட்டின் 3வது பெரிய நிலப்பரப்பு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

குமா கிராமத்தில் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. வெள்ளப் பெருக்கு கடுமையாக இருப்பதாலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப் படை மூலம் மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சுமார் 70 இடங்களில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com