சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே இன்று காலை பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே இன்று காலை பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, கையுறைகளுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கிறார்கள்.

வயதான முதியவர்களுக்கு, இளையவர்களுக்கு என தனித்தனியாக நேரங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்து வருவதையும் காண முடிகிறது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக பிரதமா் சியென் லூங் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய அரசின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 10 மாதங்களுக்கு முன்னரே பொதுத் தோ்தல் நடத்தப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் தோ்தல் நடைபெறகிறது. 

கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும், ஆளும் மக்கள் செயல் கட்சி தொடா்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com