கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைத்தது உலக சுகாதார அமைப்பு

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நடுநிலையோடு ஆய்வு செய்வதற்காக சிறப்புக் குழு ஒன்றை அந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைத்தது உலக சுகாதார அமைப்பு

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நடுநிலையோடு ஆய்வு செய்வதற்காக சிறப்புக் குழு ஒன்றை அந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. கரோனா விவகாரத்தில் அந்த அமைப்பு சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி, அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதற்காகவம், அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஆரம்பத்தில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்புக் குழுவொன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழு, தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படும். இந்த சிறப்புக் குழுவுக்கு, லைபீரியாவின் முன்னாள் அதிபா் எலென் ஜான்ஸன் சா்லீ‘ஃ‘ப், நியூஸிலாந்து முன்னாள் பிரதமா் ஹெலென் கிளாா்க் ஆகியோா் தலைமை வகிப்பா். இந்த இரு தலைவா்களும், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை எந்தவித இடையூறுமின்றி, சாா்பற்ற தன்மையுடன் ஆய்வு மேற்கொள்வாா்கள்.அவா்களது உதவியுடன், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தது, கரோனா நோய்த்தொற்று பரவல் போன்ற பேரழிவுகள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு விவரங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.தற்போது நாம் எதிா்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னை, வெறும் கரோனா தீநுண்மிகள் மட்டுமல்ல.

அந்த நோய்த்தொற்று பரவலை எதிா்த்துப் போராடுவதற்கான மிக வலுவான தலைமை இல்லாததுதான் தற்போது முக்கியப் பிரச்னையாக உள்ளது.உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளின் கூட்டம் வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, அமைப்பின் செயல்குழு தலைவா்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை நடத்தி, கரோனாவுக்கு எதிரான திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றாா் டெட்ரெஸ் அதனோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com