டிரம்ப் முகக்கவசம் அணிந்து அமெரிக்காவுக்கு சரியான திசையில் வழிகாட்டலாமா?

டிரம்ப் முகக்கவசம் அணிந்து அமெரிக்காவுக்கு சரியான திசையில் வழிகாட்டலாமா?

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் புதிய உயர் பதிவை எட்டிய நிலையில், ஜூலை 11ஆம் நாள் அந்நாட்டின் அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப்..

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் புதிய உயர் பதிவை எட்டிய நிலையில், ஜூலை 11ஆம் நாள் அந்நாட்டின் அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப், வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனைக்குச் சென்ற போது, முதன்முறையாக பொது இடத்தில் முகக் கவசம் அணிந்தார்.

அவரது தலைமையிலான பணியாளர்கள் அனைவரும் அவரைப் போல் முகக் கவசம் அணிந்தனர். இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் பல ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், முகக் கவசம் அணிய விரும்பாத அமெரிக்கர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை இது வழங்கியுள்ளது என்று தெரிவித்தன.

சில நாட்களுக்கு முன், வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி உறுப்பினர்கள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அப்போதைய டிர்ம்புக்கு எதிரான நிலையில் நின்றனர்.

இதனிடையே அமெரிக்க அரசின் துணைத் தலைவர் பேன்ஸும் முகக் கவசம் அணிந்ததோடு, மற்றவரிடம் முகக் கவசம் அணியுமாறு வேண்டுகோளும் விடுத்தார். மேலும், குடியரசுக் கட்சி உறுப்பினரும் செனெட் அவையின் சுகாதாரம் கல்வி உழைப்பாளர் மற்றும் ஓய்வூதிய ஆணையத்தின் தலைவருமான அலெக்சண்டர், முன்பு டிரம்பிடம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் முகக் கவசம் அரசியலுடன் இணைக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணத் துணைபுரியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இத்தகைய அழுத்த நிலையில் ஜுலை முதல் நாள் டிரம்ப் கூறுகையில், முகக் கவசம் அணிவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்காவின் மாநிலத் தலைவர்கள் பலர் பொது மக்கள், பொது இடங்களில் முகக் கவசம் அணிய ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பு மோசமாகி வரும் நிலைமையில், அமெரிக்க அரசியல்வாதிகள் அரசியலுக்குப் பதிலாக அறிவியலை அதிகமாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். முகக் கவசம் அணிய தெரிவு செய்த டிரம்ப், பொது மக்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

நாட்டின் நோய்த் தொற்றுத் தடுப்புக்குத் துணைபுரியும் முறையில் செயல்பட வேண்டும். முழு உலகமும் வைரஸுக்கு எதிராக போராட்டும் முயற்சியில் அமெரிக்கா தலையீடு செய்யாமல், மற்ற நாடுகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து, சரியான திசையில் நடைபோட வேண்டும் என விரும்புகிறோம்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com