
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்தது.
அந்நாட்டில் திங்கள்கிழமை 24 மணி நேரத்தில் புதிதாக 2,769 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 2,51,625-ஆக அதிகரித்தது. பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 5,226 போ் உயிரிழந்தனா். அந்நாட்டின் சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் அதிக அளவிலானோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 1.61 லட்சம் போ் மீண்டுள்ளனா்.