அமெரிக்க நிறுவனம் மற்றும் 4 பேரின் மீதான தடை: சீனா

ஜூலை 13ஆம் நாள் முதல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சீனா தொடர்பான செயற்குழு மீதும், அமெரிக்க வெளியுறவு..
அமெரிக்க நிறுவனம் மற்றும் 4 பேரின் மீதான தடை: சீனா

ஜூலை 13ஆம் நாள் முதல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சீனா தொடர்பான செயற்குழு மீதும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் சாம் பிரவுன்பேக், அமெரிக்க கூட்டாட்சி செனெட் அவை உறுப்பினர் ரூபியோ, டெட் குரூஸ், பிரதிநிதிகள் அவை உறுப்பினர் ஸ்மித் ஆகியோர் மீதும் தடை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ட்சுன் யின் தெரிவித்தார்.

அமெரிக்கச் சட்டத்தின் படி, சீனாவின் சின்ஜியாங் அரசைச் சேர்ந்த ஒரு வாரியம் மற்றும் 4 அதிகாரிகள் மீது தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று 9ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சகமும் நிதி அமைச்சகமும் அறிவித்தன.  இதனைத் தொடர்ந்து, சின்ஜியாங் விவகாரம் குறித்து, தீய நோக்கத்துடன் செயல்பட்டு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சீனா தெரிவித்தது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com