உலக நாடுகள் தனித்தனியாக செயல்பட்டால் கரோனா வைரஸ் தடுப்பில் வெற்றி இல்லை

ஒற்றுமையுடன் முயற்சி செய்தால் தாய்ஷான் மலையை இடம் மாற்ற முடியும் என்பது சீனாவின் பழமொழி.
who083740
who083740

ஒற்றுமையுடன் முயற்சி செய்தால் தாய்ஷான் மலையை இடம் மாற்ற முடியும் என்பது சீனாவின் பழமொழி. புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து சீனா சர்வதேச அமைப்புடனும் இதர நாடுகளுடனும் உடனடியாகத் தகவல்களைப் பகிர்ந்து ஒத்துழைத்து வருகிறது. மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்கி, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது சீனாவின் விருப்பமாகும்.

அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட நாடுகள் கரோனா வைரஸ் பரவல் தொடர்பான பல்வேறு வதந்திகளைப் பரப்பி, சீனா மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை வைத்த போதிலும், அந்நாடுகளுக்கும் அவற்றின் பொது மக்களுக்கும் சீனா உதவியளித்து அவற்றுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பை கைவிடவில்லை. ஏனென்றால், முழு உலகமும் ஒத்துழைத்தால்தான், மிக ஆபத்தான கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

கரோனாவின் தோற்றம் பற்றி ஆய்வு செய்யும் வகையில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் பெய்ஜிங்கிற்கு வர சீனா அனுமதி அளித்தது. வைரஸ் தோற்றத்தைக் கண்டறிவது அறிவியல் ரீதியிலான பிரச்சினை. இது, அறிவியலாளர்களால் உலகளவில் கூட்டு ஆய்வு மற்றும் ஒத்துழைப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும். இந்தப் போக்கில் பன்னாட்டு ஒத்துழைப்பும் உலக சுகாதார அமைப்பின் தலைமையும் இன்றியமையாதவை.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரொஸ் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, உலகின் பிரிவினைவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலானது, வைரஸுக்கு மாறாக, தலைமை மற்றும் ஒத்துழைப்பு இல்லாத நிலைமைதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடும் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய ரக கரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறிந்தது முதல் இதுவரை 6, 7 மாதங்கள் ஆகிவிட்டன. அதனை முற்றிலும் தடுப்பதில் எந்த நாடும் வெற்றி பெறவில்லை. உலகளவில் மிக முன்னேறிய வல்லரசான அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகி, மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் நிலைமை எப்படி? அதன் செயல்கள் மற்றும் அந்நாட்டில் வைரஸ் பாதிப்பின் மூலம், உலக நாடுகள் பிரிந்து செயல்பட்டால், கரோனா வைரஸ் பரவலைத் தோற்கடிக்க முடியாமல், மோசமான நிலையில் சிக்கிக் கொள்ளும் என்பதை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com