கரோனாவுக்கான தடுப்பூசி அதிக விலை கொடுப்பவருக்கு வழங்க வேண்டாம்: பில் கேட்ஸ் 

கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை அதிக விலை கொடுப்பவருக்கு வழங்க வேண்டாம். மாறாக, மிகவும் தேவையான மக்களுக்கு அதை வழங்க வேண்டும்
கரோனாவுக்கான தடுப்பூசி அதிக விலை கொடுப்பவருக்கு வழங்க வேண்டாம்: பில் கேட்ஸ் 

கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை அதிக விலை கொடுப்பவருக்கு வழங்க வேண்டாம். மாறாக, மிகவும் தேவையான மக்களுக்கு அதை வழங்க வேண்டும் என்று மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், அறக் கட்டளை தலைவருமான பில் கேட்ஸ் அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.

ஜூலை 11ஆம் நாள் கரோனா பற்றி சர்வதேச எய்ட்ஸ் சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு காணொலிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், உயிர் மற்றும் பொருளாதாரத்தின் மீட்சியில் கரோனா தடுப்பு மருந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனவே தொடர்புடைய மருந்துகளுக்காக உள்நோக்கத்துடன் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு முன்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனால், அமெரிக்க அரசின் சில அதிகாரிகள் “அமெரிக்கா முதலிடம்” என்ற கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com