அமெரிக்க கடற்படை கப்பலில் தீ விபத்து: 21 பேர் காயம்

அமெரிக்காவின் சான்டியாகோ கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் வெடி விபத்தால் தீப்பற்றியதில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 
அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்பட்ட தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைக்கும் முயற்சியில் சிறிய படகுகள்.
அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்பட்ட தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைக்கும் முயற்சியில் சிறிய படகுகள்.


சான்டியாகோ: அமெரிக்காவின் சான்டியாகோ கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் வெடி விபத்தால் தீப்பற்றியதில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் மைக் ரானே கூறியதாவது: 

சான்டியாகோ துறைமுகத்தின் கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "யுஎஸ்எஸ் போன்ஹோம் ரிச்சர்டு' கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் கரும்புகை சூழ்ந்தது. 840 அடி நீளமுள்ள அந்த கப்பலில் எந்த இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 17 மாலுமிகள் உள்பட 21 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார்.

இந்த விபத்து நடைபெற்றபோது அந்த கப்பலில் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்டதும், இக்கப்பலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "யுஎஸ்எஸ் ஃபிட்ஜெரால்ட்' மற்றும் "யுஎஸ்எஸ் ரஸ்ஸல்' ஆகிய இரண்டு கப்பல்களும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com