கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக உயர்ந்து வரும் சீனப் பொருளாதாரம்

பெருங்கொள்ளை நோயான கரோனா நோய்த்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதன் காரணமாக உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார நாடான சீனாவில் ஜூன் திங்களில் வணிக வளர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டன.
கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக உயர்ந்து வரும் சீனப் பொருளாதாரம்

பெருங்கொள்ளை நோயான கரோனா நோய்த்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதன் காரணமாக உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார நாடான சீனாவில் ஜூன் திங்களில் வணிக வளர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டன. இதன் காரணமாக சீனப் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது.  

சீனச் சுங்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளின் படி, சீன இறக்குமதியானது மே திங்களில் காணப்பட்ட 3.3 விழுக்காடு சரிவிலிருந்து மீண்டு, ஒட்டுமொத்தமாக கடந்த ஓராண்டில் 3 விழுக்காடு அதிகரித்து 16 ஆயிரத்து 720 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. சீன ஏற்றுமதியானது 0.4 விழுக்காடு உயர்ந்து 21 ஆயிரத்து 360 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.  

கடந்த ஆண்டு டிசம்பர்த் திங்களில் புதிய ரக கரோனா தொற்றை எதிர்கொண்டதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் பெரும் போராட்டத்தைச் சந்தித்தது. இந்நிலையில், மார்ச் திங்களில் சீனாவில் கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின், அந்நாட்டின் வணிகச் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இக்காலத்தில் சீனாவின் உற்பத்தித் துறை மீட்சியடைந்தது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com