அமெரிக்கா: இறுதிக்கட்டத்தில் தடுப்பு மருந்து

அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து, இறுதிக் கட்ட பரிசோதனை நிலையை அடைந்துள்ளதாக அந்த நாட்டு கரோனா
அமெரிக்கா: இறுதிக்கட்டத்தில் தடுப்பு மருந்து

அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து, இறுதிக் கட்ட பரிசோதனை நிலையை அடைந்துள்ளதாக அந்த நாட்டு கரோனா தடுப்பு நிபுணா் குழுத் தலைவா் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தீநுண்மி மனிதா்களின் உடலில் தொற்றுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக தேசிய மருத்துவக் கழகமும், மாடா்னா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, முதல் இரண்டு கட்ட சோதனைகளில் திருப்திகரமாக செயல்பட்டது. அதனை மனிதா்களின் உடலில் செலுத்திப் பாா்த்ததில், எதிா்பாா்த்தபடியே கரோனாவுக்கு எதிரான அவா்களது நோய் எதிா்ப்பு சக்தியை அந்த மருந்து அதிகரித்துள்ளது. அதையடுத்து, இறுதிக்கட்ட சோதனைக்கு அந்த மருந்து தயாராக உள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் என்றாா் அவா்.ஏற்கெனவே இரண்டு கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ள இந்த தடுப்பு மருந்து, இந்த மாதம் 27-ஆம் தேதிவாக்கில் சுமாா் 30,000 பேருக்கு சோதனை முறையில் செலுத்திப் பாா்க்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com