ஹுவாவெய் மீதான தடையால் யாருக்குப் பாதிப்பு? யாருக்குப் பயன்?

பிரான்சின் தொழில்துறையில் முத்து போல் இருந்த ஆல்ஸ்தம் நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி ஃபிரெட்ரிக் பியருச்சி 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டார்.
ஹுவாவெய் மீதான தடையால் யாருக்குப் பாதிப்பு? யாருக்குப் பயன்?

பிரான்சின் தொழில்துறையில் முத்து போல் இருந்த ஆல்ஸ்தம் நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி ஃபிரெட்ரிக் பியருச்சி 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆல்ஸ்தம் நிறுவனம் பாதிப்படைந்து மற்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அது போன்றே 2018ஆம் ஆண்டு ஹுவா வெய்யின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சோ கைது செய்யப்பட்ட பிறகு, ஹுவா வெய் நிறுவனம் உலகளவில் அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிரிட்டன் தனது 5ஜி கட்டுமானத்தில் ஹுவா வெய் நிறுவனத்துக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இது பற்றி, அந்நாட்டின் எண்ணியல், பண்பாடு, ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலிவர் டோவ்டன் பேசுகையில்,

இவ்வாண்டு மே திங்களில் அமெரிக்கா ஹுவா வெய் நிறுவனம் மீது புதிய நடவடிக்கையை மேற்கொண்டதால் முன்னேற்றப் போக்கு மாற்றப்பட்டது. ஹுவா வெய் நிறுவனத்தின் 5ஜி சாதனங்களின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதில் பிரிட்டனுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். அவர் இவ்வாறு வெளிப்படையாகத் தெரிவித்த கருத்தானது, பிரிட்டன் இவ்வாண்டின் தொடக்கத்தில் எடுத்த முடிவுக்கு முரணாக உள்ளது. எனவே, இதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தம் இருப்பது தெளிவாகப் புரிகின்றது.  பிரிட்டனின் இம்முடிவினால் அந்நாட்டுக்கு 200 கோடி யூரோ இழப்பு ஏற்படுவதோடு, போரிஸ் ஜான்சனின் ஆட்சி அதன் நம்பகத் தன்மையையும் இழந்து விடும்.

அமெரிக்கா தன் சொந்த நலனுக்காக எத்தனை நாடுகளின் மீது தொடர்ந்து நிர்ப்பந்தத்தைத் திணிக்கும்? பிரான்சு, பிரிட்டன் ஆகியவற்றை அடுத்து எந்த நாடு அமெரிக்காவின் சூழ்ச்சிப் பொறியில் சிக்கிக் கொள்ளும்?

ஹுவா வெய் மீது தடை நடவடிக்கை எடுக்கும் கூட்டணயில் மேலதிக நாடுளைச் சேர்க்கும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் ஹுவா வெய் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். மேலும், அமெரிக்காவுடன் வியாபாரம் செய்ய விரும்பும் நாடுகள் ஹுவா வெய் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று பல நாடுகளைத் தான் வற்புறுத்தியதை அந்நாட்டின் அரசுத் தலைவர் அண்மையில் ஒப்புக் கொண்டார். ஹுவா வெய் மீதான அமெரிக்காவின் தடை, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பில்லை. வணிகம் மற்றும் தொழில் நுட்பத்தை அரசியல்மயமாக்கும் செயலாகும் என்பதை இவை மீண்டும் நிரூபித்துள்ளன.

உலகளவில் மேலாதிக்கம் மற்றும் நீண்ட கை அதிகாரத்தைப் பயன்படுத்தும் அமெரிக்கா சர்வதேச சந்தையில் இயல்பான ஒழுங்குமுறையையும் நியாயமான போட்டி விதிகளையும் சீர்குலைத்து வருகிறது. பல தரப்புகளால் கண்டிக்கப்பட்டுள்ள அதன் மோசமான செயல் இறுதியில் அந்நாட்டுக்கு நலன்களைக் கொண்டு வரப் போவதில்லை.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com