
லண்டன்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஆய்வு செய்யப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து தயாரிப்பதில் பல நிறுவனங்களும் விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இத்தகைய சூழலில், ஃபைஸா், பயோ என் டெக் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 9 கோடி தடுப்பு மருந்துகளை வாங்க உள்ளதாக பிரிட்டன் அரசு திங்கள்கிழமை அறிவித்தது. அந்நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் உள்ளன.
ஏற்கெனவே ஆஸ்த்ரா ஜெனிகா என்ற நிறுவனத்திடமிருந்து 10 கோடி கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்காக பிரிட்டன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது. அந்நிறுவனம் தயாரித்துள்ள மருந்தை ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் பரிசோதித்து வருகிறது.