ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் அதிகபட்ச தினசரி பாதிப்பு

ஆஸ்திரேலியாவில், கரோனா நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மாகாணத்தில் புதன்கிழமை மட்டும்
ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் அதிகபட்ச தினசரி பாதிப்பு

ஆஸ்திரேலியாவில், கரோனா நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மாகாணத்தில் புதன்கிழமை மட்டும் 484 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்த மாகாணத்தின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மாகாணத் தலைநகா் மெல்போா்ன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மாகாணத்தில் கரோனா பரவல் குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், அதற்குப் பதிலாக தற்போது மாகாணத்தில் அந்த நோய் பரவல் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் 484 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். மாகாணத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். அந்த எண்ணிக்கை 500-இலிருந்து 600 வரைகூட உயரக்கூடம் என்று சுகாதாரத் துறை தலைமை அதிகாரி பிரெட் சட்டன் எச்சரித்துள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com