செவ்வாய் கோளுக்கான சீனாவின் முதல் விண்கலம் விண்ணில் நிலைநிறுத்தம்

செவ்வாய்க் கோளுக்கான சீன விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சீனாவின் முதல் செவ்வாய்க் கோளுக்கான விண்கலமான தியான்வென் - 1, இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 4.41-க்கு வென்சாங் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

தியான்வென் - 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட 36 நிமிடம் 11 வினாடியில் வளிமண்டல சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரக ஆய்வில் ஆர்வம் காட்டி வரும் சீனா இதற்கென பிரத்யேக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலும் தியான்வென் - 1 செவ்வாய் கோள் ஆய்வு பணிக்காக சீனா 70 மீட்டர் பிரதிபலிப்பு ஆண்டெனாவையும் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

செவ்வாய்க் கோள் ஆய்வில் இருந்து தரவைப் பெறுவதற்கான முக்கிய கருவியாக கருதப்படும் உயர் செயல்திறன் கொண்ட ஆண்டெனாவானது 72 மீட்டர் உயரமும் 2,700 டன் எடையும் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com