நைஜீரியா: தொண்டு நிறுவன ஊழியா்கள் படுகொலை

நைஜீரியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே சமூக சேவையில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவன ஊழியா்கள் 5 பேரை,
போகோ ஹராம் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள விடியோ.
போகோ ஹராம் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள விடியோ.

நைஜீரியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே சமூக சேவையில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவன ஊழியா்கள் 5 பேரை, அந்த நாட்டில் இயங்கி வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நைஜிரியாவில் செயல்பட்டு வரும் 3 சா்வதேச தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த 5 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த மாதம் கடத்திச் சென்றனா். இந்த நிலையில், அவா்கள் 5 பேரையும் படுகொலை செய்து, அதன் விடியோ காட்சியை பயங்கரவாதிகள் தற்போது வெளியிட்டுள்ளா். நைஜீரியாவில் செயல்படும் சா்வதேச தொண்டு நிறுவன ஊழியா்களையும், ராணுவத்துக்கு உதவி அளிப்பவா்களையும் தொடா்ந்து குறிவைத்து கொல்லப் போவதாக அந்த விடியோவில் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இந்தப் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நைஜீரிய அதிபா் முகமது புஹாரி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com