உலகின் கூட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி: ஷி ஜின்பிங்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சீனத் தலைநகர் பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 
உலகின் கூட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி: ஷி ஜின்பிங்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சீனத் தலைநகர் பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  இவ்வங்கியின் (ஏஐஐபி) தலைவராக ஜின் லிச்சுன் இரண்டாவது முறையாக வங்கி ஆளுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல் முடிவை ஜூலை 28ஆம் நாள் செவ்வாய்க்கிழமை வங்கியின் ஐந்தாவது ஆண்டு கூட்டத்தின் போது ஏஐஐபியின் ஆளுநர் குழுவின் தலைவர் அறிவித்தார்..

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் நாள் அன்று 57 ஆரம்ப உறுப்பினர்களைக் கொண்டு நிறுவப்பட்ட இவ்வங்கி தற்போது உலகம் முழுவதிலுமிருந்து 102 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

இவ்வங்கியின் 5ஆவது செயற்குழுக் கூட்டம் ஜுலை 28ஆம் நாள் காணொலி வழியாக துவங்கியது.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்னர், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் உற்பத்தித்திறன் வளர்ச்சி ஏற்கனவே கணிசமாக பலவீனமடைந்தது காணப்பட்டது. இந்த தொற்றுநோய் பாதிப்புக்கு பின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உறுப்பு நாடுகள், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் மிகவும் பாதிப்புக்குள்ளான நாடுகள் பெரும் அழுத்தத்தை சந்தித்துள்ளன. வருமானங்கள் குறைந்துவிட்டன. கடன்கள் அதிகரித்துள்ளன, நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. 

இந்த போக்கை மாற்றியமைக்க பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒரு தலைமுறையின் இழப்பை நாங்கள் அனுபவிக்க வேண்டி வரும். இதுபோன்ற பேரழிவு மக்களையும் எதிர்கால சந்ததியினரையும் காக்க வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு நாட்டின் அரசும் உள்ளது.  இந்நிலையில் ஏழை குடும்பங்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடன் (ஏஐஐபி) 750 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

குறிப்பாக முதன்மை திட்ட பயனாளிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள், விவசாயிகள், சுகாதாரப் பணியாளர்கள், பெண்கள், பெண்கள் சுய உதவிக்குழுக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், குறைந்த ஊதியம் பெறுபவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவி பேரிடர் கால நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் இவ்வங்கியின் நிதி உதவியானது இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித வளம் உள்ளிட்ட உற்பத்தித் திறனை மேம்படுத்தி பொருளாதார பின்னடைவை தடுக்கும் என்று துணைத் தலைவர் டி ஜே பாண்டியன் கூறியுள்ளார். 

இந்நிலையில் இன்று காணொலி மூலம் நடைபெற்ற ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 5 ஆவது செயற்குழுக் கூட்டத்தின் துவக்க விழாவில் பேசிய சீன அதிபர் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வளர்ச்சிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளதோடு, உறுப்பினர்களின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, சமூக முன்னேற்றத்திற்கான பாதையாக இவ்வங்கி மாற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். பல்வேறு உறுப்பினர்கள் புத்தாக்கம் மற்றும் திறந்த மனதுடன், இவ்வங்கியை உலகின் கூட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் புதிய ரக பலதரப்பு வங்கியாகவும் சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய முன்மாதிரியாகவும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், பலதரப்புவாதத்தை சீனா எப்போதுமே ஆதரித்து செயல்படுத்தி வருகிறது. திறப்பு, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை கொண்ட சிந்தனையின்படி பல்வேறு உறுப்பினர்களுடன் இணைந்து அறைகூவல்களைச் சமாளிப்பதற்காகவும் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்காகவும் மேலும் பெரும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

மனிதச் சமூகம் இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொது சமூகமாகும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து, ஒற்றுமையுடன் ஒத்துழைப்பதே நெருக்கடியைத் தோற்கடிக்கும் சரியான வழிமுறையாகும் என்பதை புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டம் காட்டியுள்ளது. 

பொருளாதாரத்தின் உலகமயமாக்கலில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில், அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய உலக மேலாண்மை, மேலும் பெரும் பயனுள்ள பலதரப்பு அமைப்புமுறை, மேலும் ஆக்கப்பூர்வமான பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பல்வேறு நாடுகள் முயற்சியுடன் உருவாக்க வேண்டும் என்றும் ஷி ஜின்பிங் சுட்டிக்காட்டினார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com