
Mexico registers 7,208 fresh COVID-19 cases
மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 854 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்சிகோவில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,208 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 4,02,629 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று, ஒரே நாளில் மேலும் 854 பேர் பலியாகியுள்ளதையடுத்து, அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,876 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில், முதல் மூன்று இடங்களில் முறையே அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் உள்ளதை அடுத்து, 4 ஆம் இடத்தில் மெக்சிகோ உள்ளது குறிப்பிடத்தக்கது.