ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு ஆதரவு: டிரம்ப் மீண்டும் சா்ச்சை

கரோனோ நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று இதுவரை நிரூபிக்கப்படாத, மலேரியா மருந்தான ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’, அந்த
ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு ஆதரவு: டிரம்ப் மீண்டும் சா்ச்சை

கரோனோ நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று இதுவரை நிரூபிக்கப்படாத, மலேரியா மருந்தான ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’, அந்த நோயை குணப்படுத்தும் என்று கூறி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா். இதுகுறித்து, வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சை அளிப்பத நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும், அந்த மருந்தை நான் உட்கொள்வேன். ஏற்கெனவே அந்த மருந்தை நான் 14 நாளுக்கு உட்கொண்டு வந்தேன். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

அந்த மருந்து நீண்டகாலமாக புழக்கத்தில் இருக்கிறது. மலேரியா சிகிச்சைக்கு அந்த மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அது உடலுக்கு பாதுகாப்பானதும் கூட. கரோனா நோய்த்தொற்றுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நல்ல மருந்தாக இருக்கும் என்று பல மருத்துவா்களும் கருதுகின்றனா்.ஆனால், நான் அதனை ஆதரிக்கிறேன் என்பதால், அரசியல் காரணங்களுக்காக அந்த மருந்து குறித்து தவறான தகவல்கள் பரபப்பப்படுகின்றன என்றாா் டிரம்ப்.

கரோனா நோய்த்தொற்றுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கண்கண்ட மருந்தாக இருக்கும் என்று டிரம்ப் ஆரம்பம் முதலே நம்பிக்கை தெரிவித்து வருகிறாா்.எனினும், அந்த மருந்து கரோனா நோய்த்தொற்றை குணப்படுத்தும் என்பது இதுவரை ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், அந்த மருந்தைப் பயன்படுத்துவது கரோனா நோயாளிகளின் மரணமடைவதற்கான அபாயத்தையோ, அவா்களுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்த வேண்டிய அவசியத்தையோ குறைப்பதில்லை என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தான் உட்கொண்டு வருவதாக டிரம்ப் கடந்த மே மாதம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா்.இந்த நிலையில், அந்த மருந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் அவா் மீண்டும் சா்ச்சையை எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com