பெண்களுக்கு ஊதியத்தில் நிகழ்த்தப்படும் பாகுபாடு: இங்கிலாந்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இங்கிலாந்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஒரே மாதிரியான வேலைக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
பணியிடத்தில் பெண்களுக்கு நிகழும் பாகுபாடு
பணியிடத்தில் பெண்களுக்கு நிகழும் பாகுபாடு

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இங்கிலாந்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஒரே மாதிரியான வேலைக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் ரிசல்யுசன் பவுண்டேசன் எனும் அமைப்பு வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது.

வாரத்தில் 50 முதல் 51 மணி நேரம் வேலை செய்யும் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.

ஒரே மாதிரியான வேலை மற்றும் சரிசமமான வேலை நேரம் ஆகியவை இருந்தாலும் ஆண்கள் பெண்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள்.

1970களில் இருந்து, பெண்கள் தங்கள் ஊதிய வேலை நேரத்தை வாரத்திற்கு ஐந்து மணி நேரத்திலிருந்து 22 மணி நேரமாக உயர்த்தியுள்ளனர். மேலும் குழந்தை பராமரிப்பு கடமைகள் மற்றும் வீட்டு வேலைகளை உள்ளடக்கிய ஊதியம் இல்லாத நேரங்களைக் குறைத்துள்ளனர்.

உயர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கிடையேயான மொத்த மணிநேர வேலை இடைவெளி 1974 இல் வாரத்திற்கு 40 நிமிடங்களிலிருந்து 2014-15 ஆம் ஆண்டில் நான்கு மணி நேரம் 20 நிமிடங்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலினப் பாகுபாடு காரணமாக பெண்கள் ஆண்களுக்கு இணையாக பெண்கள் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com