அமெரிக்காவின் நியாயமற்றச் செயலுக்கு உறுதியான விவேகமுடைய பதில் நடவடிக்கை: சீனா

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜன் யவ்ஸ்-லே..
அமெரிக்காவின் நியாயமற்றச் செயலுக்கு உறுதியான விவேகமுடைய பதில் நடவடிக்கை
அமெரிக்காவின் நியாயமற்றச் செயலுக்கு உறுதியான விவேகமுடைய பதில் நடவடிக்கை

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜன் யவ்ஸ்-லே ட்ரைனுடன், ஜூலை 28-ஆம் நாள் தொலைபேசி வழி உரையாடியபோது, சீன-அமெரிக்க உறவு குறித்து கருத்து தெரிவித்தார்.

வாங் யீ கூறுகையில்,

தற்போது சீன-அமெரிக்க உறவு சர்வதேச சமூகத்தில் பொதுவாக கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவுள்ள பொது தேர்வுக்காகவும், ஒரு துருவ மேலாதிக்கத்துக்கான தேவையை நிறைவு செய்யும் விதமாகவும், அமெரிக்க உள்நாட்டில் சில அரசியல்வாதிகள் நியாயமற்றதாக சீனாவை தடை செய்து சீனாவின் மைய நலனைச் சீர்குலைக்க இடைவிடாமல் முயன்று வருகின்றது என்று தெரிவித்தார்.

மேலும், நியாயமற்ற முறையில் செயல்படும் அமெரிக்காவுக்கு எதிராக, சீனா விவேகமுடைய உறுதியான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். முதலாவதாக, சீனத் தரப்பின் நியாயமான நலனுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான செயலுக்கு எதிராக, சீனா உறுதியுடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இரண்டாவதாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விவேகமுடைய தொடர்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த பல பத்து ஆண்டுகளிலான ஒத்துழைப்பு மூலம் இரு நாடுகளுக்கிடையே பெறப்பட்டுள்ள சாதனைகளை சில சீன எதிர்ப்பு சக்திகள் பாதிக்க அனுமதிக்காது. சிலர் தவறான எண்ணத்தைப் பயன்படுத்தி இரு நாட்டுறவின் எதிர்கால வளர்ச்சியைச் சீர்குலைக்க அனுமதிக்காது என்று வாங்யீ தெரிவித்தார்.

தவிரவும், சீனா, அமெரிக்கா மற்றும் உலக மக்களின் கூட்டு நலனைக் கருதி, சமத்துவ நிலையில் தொடர்பு மேற்கொண்டு, இரு நாட்டுறவின் நிதானமான வளர்ச்சியைப் பேணிக்காக்க விரும்புகின்றோம் என்று வாங்யீ தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com