கொதிக்கும் நீரின் வெப்பநிலையில் கரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும்: ரஷிய ஆராய்ச்சி

உலகம் இதுவரை சந்தித்திராத கரோனா தொற்றினால் பல நாடுகள் முடங்கிப் போயுள்ளன. கரோனா தொற்றில் இருந்து காக்கும் தடுப்பூசிகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.
கொதிக்கும் நீரின் வெப்பநிலையில் கரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும்: ரஷிய ஆராய்ச்சி
கொதிக்கும் நீரின் வெப்பநிலையில் கரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும்: ரஷிய ஆராய்ச்சி


மாஸ்கோ: உலகம் இதுவரை சந்தித்திராத கரோனா தொற்றினால் பல நாடுகள் முடங்கிப் போயுள்ளன. கரோனா தொற்றில் இருந்து காக்கும் தடுப்பூசிகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், துருக்கியின் அங்காராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு நடத்தும் அனடோலு ஏஜென்ஸி வெளியிட்டிருக்கும் செய்தியில், கொதிக்கும் நீரின் வெப்பநிலையில், கரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மாநில தொற்றுநோய் மற்றும் பையோ டெக்னாலஜி வெக்டார் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், கொதிக்கும் நீரின் வெப்பநிலையில் கரோனா வைரஸ் உடனடியாக, முற்றிலும் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண அறை வெப்பநிலையில் 90% கரோனா வைரஸ் 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும், 99.9 % கரோனா தொற்று 72 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரிலும் ஒரு சில சூழ்நிலைகளில் கரோனா தொற்றானது வாழும் என்றும், ஆனால் கடல் நீரிலோ, சுத்தமான நீரிலோ அவை பல்கிப் பெருகுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம், பாத்திரங்கள், கண்ணாடிகள், பிளாஸ்டிக், செராமின் தளத்தில் கரோனா தொற்றானது 48 மணி நேரம் உயிர்வாழும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com