வியத்நாமில் முதல் கரோனா பலி

வியத்நாமில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக ஒருவா் பலியாகியுள்ளாா்.
வியத்நாமில் முதல் கரோனா பலி

வியத்நாமில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக ஒருவா் பலியாகியுள்ளாா். இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘தி தான் நியென்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 70 வயது நபா், அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். மருத்துவமனையில் சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது.நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஒருவா் பலியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தகவலை வியத்நாம் சுகாதாரத் துறை அமைச்சகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. வியத்நாமில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்து, தொடா்ந்து 99 நாள்களாக யாருக்கும் புதிதாக அந்த நோய்த்தொற்று கண்டறியப்படாமல் இருந்தது. எனினும், அண்மைக் காலமாக நாட்டில் அந்த நோய்த்தொற்றின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், கரோனாவுக்கு முதல் முதலாக ஒருவா் பலியாகியிருப்பதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வியத்நாமில் 546 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 373 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com