பெய்டோவ்-3 புவியிடங்காட்டி அமைப்பின் திறப்பு விழா

பெய்டோவ்-3 எனும் உலக புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் அமைப்பு முற்றிலுமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
பெய்டோவ்-3 புவியிடங்காட்டி அமைப்பின் திறப்பு விழா

பெய்டோவ்-3 எனும் உலக புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் அமைப்பு முற்றிலுமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்றுள்ளார்.

பெய்டோவ் புவியிடங்காட்டி அமைப்பு சீனாவிலேயே சொந்தமாக ஆய்ந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது வரை, இந்த அமைப்புடனான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் 137 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அதனையடுத்து, அமெரிக்காவின் ஜி.பி.எஸ், ரஷியாவின் குளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ ஆகியவற்றோடு சீனாவின் பெய்டோவ் புவியிடங்காட்டி அமைப்பு முறையும் சேர்ந்து உலகின் 4 முக்கிய புவியிடங்காட்டி அமைப்புகளாக திகழ்கின்றன.

தகவல்-சீன ஊடகக் குழுமம்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com