அமெரிக்காவில் இனப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் கொலை சம்பவம்

அமெரிக்காவின் மின்னிபோலிஸ் நகரில் 25ஆம் நாள் ஜார்ஜ் ஃபுலோயிட் எனும் ஆப்பிரிக்க வம்சாவழி அமெரிக்கர், வெள்ளை இனக் காவற்துறை அதிகாரி ஒருவரின் வன்முறையால் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் இனப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் கொலை சம்பவம்

அமெரிக்காவின் மின்னிபோலிஸ் நகரில் 25ஆம் நாள் ஜார்ஜ் ஃபுலோயிட் எனும் ஆப்பிரிக்க வம்சாவழி அமெரிக்கர், வெள்ளை இனக் காவற்துறை அதிகாரி ஒருவரின் வன்முறையால் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து அந்நாட்டின் பல இடங்களில் பெருமளவு கலவரம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்துள்ள பின்னணியில் இந்த சம்பவம், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், அந்நாட்டின் இனப் பாகுபாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் நிலைமை கட்டுப்பாட்டின்றி சென்று கொண்டிருக்கும் போது, அமெரிக்க அரசுத்தலைவர் சமூக ஊடகத்தில், கலவரம் தீவிரவாதிகளின் செயல், இச்சமயத்தில் எவர் கொள்ளையடித்தாலும் சுடப்படுவர் என்று எச்சரித்தார். ஆனால் வலிமைமிக்க வார்த்தைகளை வெளிக்காட்டிய அவருக்கு, சொந்த நாட்டின் இணையப் பயனாளர்களால் விமர்சனத்துக்கு உள்ளானார்.

மற்ற நாடுகளில் கலவரம் ஏற்பட்ட போது அதனை அழகான காட்சி என கூறிய அமெரிக்க அரசியல்வாதிகள், சொந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களின் சட்டப்பூர்வ உரிமையைப் பேணிக்காக்கும் செயலை உடனே அடக்கி வைப்பது என்பது, வெறுப்புக்குரிய இரட்டை வரையறை என்று சிலர் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிலவும் இனவெறிக்கு நீண்ட வரலாறு உண்டு என்ற போதிலும், அந்நாட்டின் அரசியல்வாதிகள் இந்த பிரச்சினை குறித்து மீளாய்வு செய்யவில்லை. சொந்த எதிர்காலம் மற்றும் சுயநலனை மட்டும் அவர்கள் கருத்தில் கொள்கின்றனர். அவர்களின் செயல்கள், வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கு மாறாக, இனப் பாடுபாட்டினால் ஏற்படும் பகைமையைத் தீவிரமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com