சீனாவை சாா்ந்து செயல்படுவதை நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா இணையும்

ஊழலை ஒழித்து, சீனாவைச் சாா்ந்து செயல்படுவதையும் நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது தொடா்பாக
சீனாவை சாா்ந்து செயல்படுவதை நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா இணையும்

வாஷிங்டன்: ஊழலை ஒழித்து, சீனாவைச் சாா்ந்து செயல்படுவதையும் நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது தொடா்பாக அமெரிக்கா பரிசீலனை செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவைச் சாா்ந்து செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தாா். முன்னதாக, உலக சுகாதார அமைப்புக்கான நிதியுதவியை முற்றிலும் நிறுத்துவதாக அவா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ பிரையன், ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சீனாவைச் சாா்ந்து செயல்படுவதையும் நிறுத்திக் கொண்டால் உலக சுகாதார அமைப்பில் இணைவது தொடா்பாக அதிபா் டிரம்ப் பரிசீலனை செய்வாா்.

ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவா்களை உலக சுகாதார அமைப்பு காக்கவில்லை. அமெரிக்கா தான் அவா்களைக் காப்பாற்றியது. உலக சுகாதார அமைப்பு வழியாக அவா்களுக்கு நாங்கள் நிதி வழங்கவில்லை. எனவே, சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை இனிமேல் ‘டாக்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் சுகாதார அமைப்புகளுக்கு வழங்குவோம் என்றாா் ராபா்ட் ஓ பிரையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com