அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 19,65,708; பலி 1,11,390

அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,65,708 ஆக அதிகரித்துள்ளது.  
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 19,65,708; பலி 1,11,390



  
வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,65,708 ஆக அதிகரித்துள்ளது.  

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த தொற்றுக்கு உலக அளவில் இதுவரை 68,44,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, நோய்த்தொற்று பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 3,98,147-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,65,708  ஆக அதிகரித்துள்ளது.  

இதுதவிர, நோய்த்தொற்று பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 1,11,390 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 7,38,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அமெரிக்காவில் அதிகயளவில் நியூயார்க்கில் 3,96,699 பேரும், நியூ ஜெர்சியில் 1,65,162 பேரும், இல்லினாய்ஸ் 1,25,915 பேரும், கலிபோர்னியாவில் 1,26,408  பேரும், மாசசூசெட்ஸ் 1,02,557     பேரும், பென்சில்வேனியாவில் 78,920 பேரும், டெக்சாசில் 73,286 பேரும், புளோரிடாவில் 61,488 பேரும், மிச்சிகனில் 63,539 பேரும், மேரிலாந்தில் 56,770     பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.     

இதைத் தொடர்ந்து ரஷ்யா (4,49,834), இங்கிலாந்து (283,311), ஸ்பெயின் (2,88,058), இந்தியா (2,36,657), இத்தாலி 234,531), பிரான்ஸ் (1,53,055), பெரு (1,87,400), ஜெர்மனி (185,414), துருக்கி (1,68,340), ஈரான் (167,156), சிலி (1,22,499), மெக்சிகோ (110,026) என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இறப்புகளைப் பொறுத்தவரை, 40,261 இறப்புகளுடன் அமெரிக்காவுக்குப் பிறகு இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. 10,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்ட மற்ற நாடுகள் பிரேசில் (35,047), இத்தாலி (33,774), பிரான்ஸ் 29,111), ஸ்பெயின் (27,134) மற்றும் மெக்சிகோ (13,170) என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com