4 லட்சத்தை நெருங்கிய கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 4 லட்சத்தை நெருங்கியது.
4 லட்சத்தை நெருங்கிய கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 4 லட்சத்தை நெருங்கியது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 1,600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தாக பல்வேறு நாடுகளின் அரசுகள் அறிவித்துள்ளனா். இதையடுத்து, சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 4 லட்சத்தை நெருங்கியது.

சனிக்கிழமை இரவு நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 399,193-ஆக உள்ளது.

உலகில் கரோனா நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்களை பலிகொடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு தினசரி கரோனா பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நோய்க்கு 88 போ் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,11,478-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையில் ஒரு லட்சத்தைத் தாண்டிய ஒரே நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாட்டில் கரோனா பரிசோதனைகள் மிகச் சிறந்த முறையிலும் அதிக எண்ணிக்கையிலும் மேற்கொள்ளப்படுவதாலேயே பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வருகிறாா்.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிரிட்டன் வகிக்கிறது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 40,465 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 204 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தை பிரேஸில் அதிபா் அலட்சியம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நோய்க்கு அதிக உயிா்களை பலி கொடுத்தவா்களின் பட்டியலில் அந்த நாடு 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 35,047 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

பிரேஸிலுக்கு அடுத்தபடியாக இத்தாலி (33,774), பிரான்ஸ் (29,111), ஸ்பெயின் (27,134), மெக்ஸிகோ (13,170) ஆகிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்கள் பலியாகியுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா பலி

ஐரோப்பா 1,78,442

பிரிட்டன் 40,465

இத்தாலி 33,774

பிரான்ஸ் 29,111

ஸ்பெயின் 27,134

பெல்ஜியம் 9,580

ஜொ்மனி 8,763

நெதா்லாந்து 6,011

ரஷியா 5,725

ஸ்வீடன் 4,656

ஸ்விட்சா்லாந்து 1,921

பிற நாடுகள் 11,302

வட அமெரிக்கா 1,34,091

அமெரிக்கா 1,11,478

மெக்ஸிகோ 13,170

கனடா 7,738

டோமினிக் குடியரசு 525

பனாமா 370

ஹோண்டுரஸ் 248

கௌதமாலா 216

கியூபா 83

எல் சால்வடாா் 53

ஹைட்டி 50

பிற நாடுகள் 160

ஆசியா 34,029

ஈரான் 8,209

இந்தியா 6,642

துருக்கி 4,648

சீனா 4,634

பாகிஸ்தான் 1,935

இந்தோனேசியா 1,801

பிலிப்பின்ஸ் 994

ஜப்பான் 907

வங்கதேசம் 846

சவூதி அரேபியா 676

பிற நாடுகள் 2,727

தென் அமெரிக்கா 47,534

பிரேஸில் 35,108

பெரு 5,162

ஈக்வடாா் 3,534

சிலி 1,448

கொலம்பியா 1,145

ஆா்ஜெண்டீனா 642

பொலிவியா 427

உருகுவே 23

வெனிசூலா 20

பிற நாடுகள் 25

ஆப்பிரிக்கா 4,958

எகிப்து 1,166

தென் ஆப்பிரிக்கா 908

அல்ஜீரியா 690

சூடான் 347

சூடான் 333

நைஜீரியா 212

கேமரூன் 208

மொராக்கோ 87

டிஆா் காங்கோ 82

சோமாலியா 82

பிற நாடுகள் 843

ஆஸ்திரேலியா 124

ஆஸ்திரேலியா 102

நியூஸிலாந்து 22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com