வறுமை ஒழிப்பில் சீனாவின் வழிமுறைகள்

சீனாவின் நிங் ஷியா ஹூய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதியில் உள்ள மலைப் பிரதேசம்,
வறுமை ஒழிப்பில் சீனாவின் வழிமுறைகள்

சீனாவின் நிங் ஷியா ஹூய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதியில் உள்ள மலைப் பிரதேசம், உலகளவில் மிக மோசமான இயற்கை சூழல் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகும். அங்குள்ள மக்கள் முன்பு இயற்கை மாற்றத்துக்கு ஏற்ப விவசாயம் செய்து வறுமையில் அல்லல்பட்டு வந்தனர். தற்போது, அரசின் ஏற்பாட்டில் ஹுங் டே என்ற கிராமத்துக்குக் குடிபெயர்ந்துள்ள அவர்கள், தொழில் வளர்ச்சி, உழைப்பாற்றல் ஏற்றுமதி முதலியவை மூலம் இன்பமான வாழ்வை வாழ்ந்து மகிழ்கின்றனர்.

தொழில்களை வளர்ப்பது, வறுமை ஒழிப்புக்கான அடிப்படை வழிமுறையாகும். 2016ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தில் கள ஆய்வு மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வறுமை ஒழிப்பில் தொழிலின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டினார்.

பல ஆண்டுகளின் முயற்சியுடன் தொழில்களை வளர்ப்பதன் மூலம் ஹுங் டே கிராமவாசிகள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். அவர்களின் அனுபவம், சீனாவின் வறுமை ஒழிப்புக்கான சிறிய பதிவாகும். நிலைமைக்கு ஏற்பச் செயல்படுவது, வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான திறவுகோலாகும்.

சீனாவின் வறுமை ஒழிப்பு முன்னேற்றங்கள், மக்களுக்கு இன்பம் மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன. மக்களின் விவேகம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த இவ்வழிமுறை, உலகளவில் வறுமையைக் குறைக்கும் போக்கைத் தீவிரப்படுத்துவதற்கான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com