கொவைட்-19 தொற்று நோய் விவகாரத்தில் சீனா மீதான அமெரிக்க அரசியல்வாதிகளின் அவதூறு

கொவைட்-19 நோய் தொற்றை எதிர்த்து போராடி வரும் காலவரிசை மற்றும் தரவுகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து, சீன அரசு 7ஆம் தேதி வெளியிட்ட வெள்ளையறிக்கையில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கொவைட்-19 தொற்று நோய் விவகாரத்தில் சீனா மீதான அமெரிக்க அரசியல்வாதிகளின் அவதூறு

கொவைட்-19 நோய் தொற்றை எதிர்த்து போராடி வரும் காலவரிசை மற்றும் தரவுகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து, சீன அரசு 7ஆம் தேதி வெளியிட்ட வெள்ளையறிக்கையில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் முதல் 2020ம் ஆண்டு மே திங்கள் இறுதி வரை ஐந்து கட்டங்களாக சீனா நோய் தொற்றைச் சமாளிப்பதற்காக எடுத்த நடவடிக்கைகளின் உண்மை தகவல்கள்  விரிவாக தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளையறிக்கையில் வழங்கப்பட்ட தரவுகள் உள்ளிட்ட தகவல்கள் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கொவைட்-19 தொற்றைச் சமாளிப்பத்தில் சீனா காலதாமதமின்றி செயல்பட்டு தகவல்களை ஒளிவு மறைவின்றி எடுக்கக் கூறியதை இது வெளிக்காட்டுகிறது. 

மேலும், மே 31ஆம் தேதி  வரை, சீனாவில், கொவைட்-19 தொற்று குறித்து, 161 மத்திய அரசு நிலை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, 1,400க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. கூடுதலாக,  ஹுபெய் மாநிலத்தில் 103 செய்தியாளர்கள் கூட்டங்களும் பிற மாநிலங்களில் 1050 செய்தியாளர்கள் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த செய்தியாளர்கள் கூட்டங்கள், சர்வதேச சமூகத்திற்கு விரைவான தகவல்களை அளித்துள்ளது. இது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பணியில் சீனா வெளிப்படையாக செயல்படுவதற்கான மற்றொரு ஆதாரமாகும்.

ஆனால், நோய் ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் சீனா சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த தெளிவான தகவல்களைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க அரசியல்வாதிகள் காலதாமதமாக செய்லபட்டுள்ளதால், அமெரிக்காவில் நோய் தொற்று தொடர்ந்து தீவிரமாகி, பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால்,  அவர்கள் வதந்திகளை உருவாக்கி, சீனா மீது அவதூறு பரப்பி வருகின்றனர். தவிர, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை வீழ்த்துவதாக  கவலைப்பட்டுள்ள அரசியல்வாதிகள் சிலர், சுய நலன்களுக்காக,  வேண்டுமேன்று நோய் தொற்று தகவல்களை மறைந்துள்ளனர். தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில், உள்நாட்டு மக்களின் கோபங்களை பிற நாடுகளுக்கு கொண்டு வர அவர்கள் முயன்றுள்ளனர்.

2019ம் ஆண்டு செப்டம்பர் தொடங்கிய காய்ச்சலில், சிலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத் தலைவர் முன்பு உறுதி செய்தார்.

ஆனால், இன்று வரை, அமெரிக்காவில் தொற்று நோய் எப்பொழுது தொடங்கியது குறித்த தகவல் இன்னும் குழப்ப நிலையில் இருக்கிறது. தொற்று நோய் குறித்து உண்மையைச் சொன்ன வல்லூநர்கள், அறிஞர்கள் அரசு ஊழியர்கள் ஆகியோரை, அமெரிக்க அரசு பணி நீக்கம் செய்துள்ளது.  இதனால்,  வெளிப்புறத்தில் இருந்து அமெரிக்காவின் உண்மையான தகவல்களை அறிந்துக் கொள்ள முடியாது. இதன் விளைவாக, அமெரிக்காவில் நோய் தொற்று தீவிரமாகி வருகிறது.

மனிதர்களுக்கு பொதுவான எதிரியான வைரஸை ஒழிக்க,  சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.  தவறான எண்ணத்தைத் தவிர்த்து,  தொற்று நோயை அரசியலாக்குவதைக் கைவிட வேண்டும். அமெரிக்க அரசியல்வாதிகள் வதந்திகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, அமெரிக்க மக்களுக்கு  பயனளிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com