நேபாளத்தில் டிப்பர் லாரி ஆற்றுக்குள் பாய்ந்து 30 பேர் மாயம்

இந்தியாவிலிருந்து திரும்பியவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி ஒன்று புதன் காலை ஆற்றுக்குள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில், 30 பேரைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லாரி ஆற்றினுள் பாய்ந்து விபத்து
லாரி ஆற்றினுள் பாய்ந்து விபத்து

காத்மாண்டு: இந்தியாவிலிருந்து திரும்பியவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி ஒன்று புதன் காலை ஆற்றுக்குள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில், 30 பேரைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பிய 50 நேபாள நாட்டினரை ஏற்றிக் கொண்டு, புதன்கிழமை காலை டிப்பர் லாரி ஒன்று காலிகொட் மாவட்டத்தில் உள்ள ரஸ்கொட் நகராட்சிக்கு தனிமைப்படுத்துதல் முகாமிற்கு பயணமாகிக் கொண்டிருந்தது.

அந்த லாரியானது கர்னலி நெடுஞ்சாலையில் லலிகாட் என்னும் இடத்திற்கு அருகில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி கர்னலி ஆற்றினுள் பாய்ந்தது.

சம்பவம் குறித்த தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கியவர்களில் சுமார் 20 பேரை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்துள்ளது. மீதமுள்ளோரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அதிக அளவிலான ஆட்களை லாரியில் ஏற்றியதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com