திஜானி முகமது-பண்டே
திஜானி முகமது-பண்டே

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில்விடியோ மூலம் தலைவா்கள் உரை

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் விடியோ பதிவு மூலம் உரையாற்றவிருக்கிறாா்கள்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் விடியோ பதிவு மூலம் உரையாற்றவிருக்கிறாா்கள்.

இதுகுறித்து உறுப்பு நாடுகளுக்கு அந்த சபையின் தலைவா் திஜானி முகமது-பண்டே எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. எனவே, அவா்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட விடியோக்கள் மூலம் அந்தக் கூட்டத்தில் உரையாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய திஜானி, ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காமல் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம், வரும் செப்டம்பா் மாதம் 22-ஆம் தேதி தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com