பொய் கூறி உலகை ஏமாற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

மோசடி செய்வதை பெருமையாக கருதி வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் மீண்டும் சீனா மீது அவதூறு பரப்பியுள்ளார்.
பொய் கூறி உலகை ஏமாற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

மோசடி செய்வதை பெருமையாக கருதி வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் மீண்டும் சீனா மீது அவதூறு பரப்பியுள்ளார். அதாவது, அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, சீனா போலி பிரசாரம் செய்வது வருவதாக, பாம்பியோ அவதூறு பேசினார்.

ஜார்ஜ் பிளாய்ட் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இனவெறி பாகுபாட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மேலும், அமெரிக்காவின் இனவெறி பாகுபாட்டுப் பிரச்சினை உலகளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நான்கு முன்னாள் அரசுத் தலைவர்களும்  ஐ.நா.வின் அதிகாரிகளும் அடுத்தடுத்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த உண்மையைப் பொருட்படுத்தாமல், மைக் பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர்  சீனாவுக்கு எதிரான பொய் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து வரும் சீனா, அமெரிக்காவின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதில் ஆர்வம் கொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்த முயலும் மைக் பாம்பியோ, வழக்கமாக பொய் பேசுபவர் என்பதை காட்டுகிறது.

பல உண்மைகளில் இருந்து,  பொய் தகவல்களை உருவாக்கி, உலகை ஏமாற்றுவது என்பது, மைக் பாம்பியோ கடைப்பிடித்து வரும் தூதாண்மைத் தந்திரமாகும். உள்நோக்கத்துடன் பாம்பியோ போன்றவர்கள் அவர்கள் இடைவிடாமல் பல புதிய பொய் கூற்றுகளை உருவாக்கி வருகின்றனர்.

சீனாவைக் குறைகூறுவது, அவர்களின் பல்வேறு மோசடித் தந்திரங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு மார்ச் திங்களின் பிற்பாதியில், ட்விட்டர் சமூக வலைதளத்தில், 5000க்கும் அதிகமான கணக்குகள் மூலம் ஒருங்கிணைந்த முறையில், ‘கொவைட்-19 தொற்று சீனாவின் உயிரி ஆயுதம் ஒன்றாகும்’என்ற வதந்தி பரப்பப்பட்டது என்பதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு நிரூபித்துள்ளது. மேலும்,  இந்த வதந்தி பரப்பிய கணக்குகளில் பல, தொலைத்தூர முறையில் கட்டுப்படுத்தப்படும் ‘ரோராபாட் கணக்குகள்’ ஆகும் என்றும், வதந்தித் தகவலை பரப்பிய பல பயனர்களின் குழுக்கள், அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களுடன் தொடர்பு உடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் திங்களின் இறுதியில், வுஹான் வைரஸ் என்ற எழுத்துக்களை 7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்களின்  கூட்டறிக்கையில் இணைக்க, பாம்பியோ முயன்றார். இது தற்செயல் அல்ல. இதன் மூலம், சீனாவுக்கு எதிராக வதந்தியை உருவாக்கியவர், பாம்பியோ தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தூதாண்மை துறையில், முழு மூச்சுடன்  விளம்பரப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வரும் மைக் பாம்பியோவின் செயல் அமெரிக்கா நாட்டின் வரலாற்றில் மிக அவமானகரமானதாகும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com