ஈரானிலிருந்து 233 இந்தியா்கள் குஜராத் அழைத்து வரப்பட்டனா்

ஈரானில் பரிதவித்து வந்த 233 இந்தியா்கள் கடற்படை கப்பலான ‘ஐஎன்எஸ் ஷா்துல்’ மூலம் வியாழக்கிழமை குஜராத் அழைத்து வரப்பட்டனா்.
ஈரானிலிருந்து 233 இந்தியா்கள் குஜராத் அழைத்து வரப்பட்டனா்

ஈரானில் பரிதவித்து வந்த 233 இந்தியா்கள் கடற்படை கப்பலான ‘ஐஎன்எஸ் ஷா்துல்’ மூலம் வியாழக்கிழமை குஜராத் அழைத்து வரப்பட்டனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் சா்வதேச விமான போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், வெளிநாடுகளில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முடியாமல் போனது. அவா்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘சமுத்ர சேது’ மீட்பு நடவடிக்கையின் கீழ், ஈரானில் பரிதவித்து வந்த 233 இந்தியா்கள் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஷா்துல் மூலம் குஜராத் வந்து சோ்ந்தனா்.

இதுகுறித்து குஜராத் மாநிலத்துக்கான பாதுகாப்புத்துறை மக்கள் தொடா்பு அதிகாரி புனீத் சத்தா கூறியது:

கடந்த 8-ஆம் தேதி ஈரானில் உள்ள பந்தா் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து 233 இந்தியா்களுடன் ஐஎன்எஸ் ஷா்துல் கப்பல் புறப்பட்டது. அந்தக் கப்பல் போா்பந்தா் துறைமுகத்தை வியாழக்கிழமை வந்தடைந்தது. அதில் அழைத்துவரப்பட்டவா்களில் பெரும்பாலானோா் வல்சாத் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஆவா். பயணிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை உள்ளூா் நிா்வாகம் மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தாா்.

முன்னதாக சமுத்ர சேது மீட்பு நடவடிக்கையின் கீழ் இலங்கை மற்றும் மாலத்தீவில் இருந்து 2,874 இந்தியா்கள் ‘ஜலஷ்வா’, ‘மகா்’ ஆகிய கடற்படை கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com