ரென்மின்பி கடன் பத்திரங்களின் வெற்றிகரமான வெளியீடு

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி 11ஆம் நாள் சீன வங்கிகளுக்கு இடையேயான கடன் பத்திரச் சந்தையில் முதன் முறையாக ரென்பின்பி நாயணத்தால் பாண்டா பத்திரங்கள் என அழைக்கப்படும்..
ரென்மின்பி கடன் பத்திரங்களின் வெற்றிகரமான வெளியீடு

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி 11ஆம் நாள் சீன வங்கிகளுக்கு இடையேயான கடன் பத்திரச் சந்தையில் முதன் முறையாக ரென்பின்பி நாயணத்தால் பாண்டா பத்திரங்கள் என அழைக்கப்படும் 300 கோடி யுவான் மதிப்புள்ள கடன் பத்திரங்களை வினியோகித்தது.

2.4 சதவீதம் வட்டி விகிதத்தைக் கொண்ட இந்தக் கடன் பத்திரங்களின் கால வரம்பு 3 ஆண்டுகள் ஆகும். 

இந்தக் கடன் பத்திரங்களின் வினியோகம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை பத்திரங்களை வாங்க பதிவு செய்த தொகை பத்திரத்தின் முகப்பு மதிப்பை விட 2.78 மடங்காகும்.

சீன நாணய சந்தை நிறுவன முதலீட்டாளர் சங்கத்தின் ஒப்புதலுடன் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி இந்த கடன் பத்திரங்களை கொவைட்-19 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான கடன் பத்திரமாக வினியோகித்துள்ளது. 

கொவைட்-19 நோய் நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் நோய்த் தொற்று தடுப்புத் திட்டத்துக்கு இவ்வங்கி அவரச நிதித் திரட்டல் ஆதரவை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com