
பிலிப்பின்ஸின் மத்தியில் அமைந்துள்ள சேபு நகரில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, தலைநகா் மணிலாவில் வீட்டுக்குள் முடங்கியிருப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த அமைச்சரவை திங்கள்கிழமை இரவு எடுத்த முடிவுக்கு அதிபா் ரோட்ரிகோ டுடோ்தே ஒப்புதல் வழங்கியுள்ளாா். இதுவரை பிலிப்பின்ஸில் 26,781 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அவா்களில் 1,103 போ் பலியாகியுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...