சீன-இந்திய எல்லையில் நிலவும் சூழ்நிலை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

சீன-இந்திய எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதல் பற்றிய கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸாவ் லீஜியான் ஜுன் 18ஆம் நாள் பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது, சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.

15ஆம் நாள் சம்பவம் நிகழ்ந்த பிறகு, சீனாவும் இந்தியாவும் இராணுவம் மற்றும் தூதாண்மை வழிமுறையின் மூலம் கருத்துகளை ஒருங்கிணைத்துள்ளன. தற்போது, சீன-இந்திய எல்லைப் பகுதியின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளின் வழிகாட்டலில், தற்போதைய நிலைமையை உகந்த முறையில் சமாளித்து எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காத்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com