கொவைட்-19க்கு எதிரான சர்வதேசச் சமூக ஒத்துழைப்பு

கொவைட்-19க்கு எதிரான ஒற்றுமை குறித்த சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாட்டுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் தலைமை தாங்கி
கொவைட்-19க்கு எதிரான சர்வதேசச் சமூக ஒத்துழைப்பு

கொவைட்-19க்கு எதிரான ஒற்றுமை குறித்த சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாட்டுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார். இவ்வுச்சிமாநாடு, சீன-ஆப்பிரிக்காவின் பயனுள்ள ஒத்துழைப்புக்குத் திசை காட்டி, கொவைட்-19க்கு எதிரான சர்வதேசச் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வலிமையான ஆற்றலை ஊட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இதைத் தவிர, மேலை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து தொற்றுநோய் பிரச்சினையை அரசியலாக்குவதோடு நோய் தடுப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்புக்குத் தடை உருவாக்குகிறார்கள். இப்பின்னணியில், ஐ.நா.வை மையமாகக் கொண்ட உலக மேலாண்மை அமைப்பு முறையைப் பேணிகாத்து, இனவெறி பாகுபாட்டையும் தவறான எண்ணங்களையும் எதிர்க்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் கருத்து தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் முன்வைத்த சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு ஆலோசனைகளை ஆப்பிரிக்க நாடுகள் வெகுவாக பாராட்டின.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com