சீன அரசுத் தலைவர்-ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவர்கள் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் 22ஆம் நாள் காணொலி மூலம் ஐரோப்பிய பேரவைத் தலைவர் சார்லஸ் மைகல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் வர்சுலா வான் தேர் லெயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

ஐரோப்பாவுடன் இணைந்து முயற்சி செய்து, "தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில்" இரு தரப்பு உறவை மேலும் உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல சீனா விரும்புகின்றது. சீனாவும் ஐரோப்பாவும் உலகத்தின் அமைதியையும் நிதானத்தையும் பேணிகாக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

சீனாவுடன் இணைந்து இரு தரப்புகளின் வர்த்தக அளவை விரிவாக்கவும் இரு நாட்டு முதலீட்டு உடன்படிக்கையை விரைவில் எட்டவும் விரும்புவதாக மைகலும் வான் டெர் லெயனும் தெரிவித்தனர். கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பை விரைவில் சமாளிக்கும் வகையிலும் உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை மேம்படுத்தும் வகையிலும் இரு தரப்பும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

22ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களின் சந்திப்பு 22ஆம் நாள் காணொலி மூலம் நடைபெற்றது. சீன தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவர்களின் முதலாவது அதிகாரப்பூர்வச் சந்திப்பு இதுவாகும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com