இரண்டாம் உலகப் போர் வெற்றி தினம்: ரஷியாவில் ராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டம்

இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினம் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இன்று ராணுவ அணி வகுப்புடன் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போர் வெற்றி தினம்: ரஷியாவில் ராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டம்


மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினம் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இன்று ராணுவ அணி வகுப்புடன் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை ரஷியப் படைகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் வென்றதன் 75-வது ஆண்டு வெற்றித் தினம் இன்று மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்ய ராணுவ வீரர்களின் சிறப்பு மிக்க அணிவகுப்பை ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டு, ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

மே மாதம் 9-ம் தேதி நடைபெற வேண்டிய ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி, கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த போது, மாஸ்கோவில் இதே ஜூன் 24-ம் தேதிதான் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com