700 கி.மீ. தூரத்துக்கு பயணித்த மின்னல்: உலக சாதனை படைத்தது

தெற்கு பிரேசிலில் வானில் உண்டாகி 700 கி.மீ. தூரத்துக்கு பயணித்த ஒரே மின்னல் கற்றை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதனை உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


தெற்கு பிரேசிலில் வானில் உண்டாகி 700 கி.மீ. தூரத்துக்கு பயணித்த ஒரே மின்னல் கற்றை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதனை உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு பிரேசிலில் இந்த மிக நீண்ட மின்னல் அக்டோபர் 31-ம் தேதி 2018 அன்று நிகர்ந்துள்ளது. இந்த மின்னல் பயணித்தத்தொலைவானது வாஷிங்டன் டி.சி., முதல் பூஸ்டன் நகர் வரையிலான தூரத்துக்கு ஒப்பானது.

அதே சமயம், நீண்ட நேரம் மின்னிய மின்னலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2019-ஆம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி வடக்கு அர்ஜன்டினாவில் உண்டான மின்னல் 16.73 வினாடிகள் நீடித்து, உலகின் மிக நீண்ட நேர மின்னல் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.

இவை இரண்டுமே, மின்னல்களில் மிக அபாரமான மின்னல்களாகும் என்று அரிசோனா பல்கலை பேராசிரியர் ராண்டல் செர்வெனி தெரிவித்துள்ளார்.

பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்ட மின்னல்களைக் கண்டறியும் கருவியின் மூலம் இந்த மிகப்பெரிய மின்னல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2007-ஆம் ஆண்டு ஓக்லஹோமாவில் 320 கி.மீ. தூரம் பயணித்த ஒற்றை மின்னல் கற்றைதான் மிக நீண்ட மின்னலாக உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. பிரான்ஸில் 2012-ஆம் ஆண்டு 7.74 வினாடிகள் நீடித்த மின்னலே உலகின் மிக நீண்ட மின்னலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com